வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (19/06/2018)

கடைசி தொடர்பு:17:53 (19/06/2018)

சொந்தப் படத்தை இயக்கி நடிக்கிறார் சிம்பு

சிம்பு

இளம் நடிகர்களில் நல்ல நடிப்புத் திறமை இருந்தும் ஏனோ அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறார் சிம்பு. ஏற்கெனவே இவர் நடித்து வெளிவந்த `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' திரைப்படத்தால் பெரும் சர்ச்சைக்குள் சிக்கிக்கொண்டார். இனிமேல் சிம்பு புதுப்படங்களில் நடிப்பாரா என்று கேள்விக்குறி எழுந்தபோது `நான் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கிறார்' என்று மணிரத்னம் கரத்தை உயர்த்திக் காட்டினார்.

`சிம்பு படப்பிடிப்புக்கு லேட்டாக வருவார்' என்கிற குற்றச்சாட்டை உடைக்கும் வண்ணம் `செக்கச் சிவந்த வானம்'  படப்பிடிப்புக்கு காலந்தவறாமல் ஆஜராகி நடித்ததைப் பார்த்து பலபேர் ஆச்சர்ய வெள்ளத்தில் அமிழ்ந்து போனார்கள். ஒரு வழியாகச் `செக்கச் சிவந்த வானம்' படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. `பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியில் கலந்துகொள்ளப்போகிறார்' என்று கிளப்பிவிடப்பட்ட வதந்தி கண்டு வதங்கிப் போனார் சிம்பு. இப்போது `நான் ஃபீனிக்ஸ் என்னை அழிக்க முடியாது' என்று கங்கணம் கட்டிக்கொண்டு படுமும்முரமாகப் புதுப்படத்தின் கதையை ரகசியமாக டிஸ்கஷன் செய்து வருகிறார். அதுசரி தயாரிப்பாளர் யார் என்று விசாரித்தோம். சிம்பு ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம் மட்டுமல்ல தயாரிப்பாளரும் சிம்புதானாம்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க