வெளியிடப்பட்ட நேரம்: 17:24 (21/06/2018)

கடைசி தொடர்பு:17:27 (21/06/2018)

''இன்டர்மீடியேட் கலர்ஸை மிக்ஸ் மேட்ச் பண்ணினா, சூப்பரா இருக்கும்!’’ - ஷிவானி ஃபேஷன் டிப்ஸ்

`பகல் நிலவு' சீரியலின் ஆரம்பத்தில் வெஸ்டர்ன் டிரஸ், அப்புறம் தாவணி, இப்போ புடவை என மூன்று விதமான காஸ்டியூம்களில் வெரைட்டி காட்டும் சான்ஸ் கிடைச்சிருக்கு.

துருதுரு கண்களும் துள்ளல் பேச்சுமாக, `பகல் நிலவு' சீரியலில் ரசிகர்களை கவர்பவர், ஷிவானி. ``எனக்கு டப்ஸ்மாஷ் செய்வதில் ஆர்வம் அதிகம். அப்படி நான் செய்த டப்ஸ்மாஷைப் பார்த்துட்டுதான் `பகல் நிலவு' வாய்ப்பு வந்துச்சு. இப்போ, என் இயல்பான நடிப்பு மற்றும் டிரஸ்ஸிங்சென்ஸை நிறைய ரசிகைகள் பாராட்டறாங்க'' என்கிறார். இந்த ஆண்டு ப்ளஸ் டூ முடித்துள்ள இளம் சீரியல் நடிகை இவர்தான். தனது வார்ட்ரோப் பற்றிய தகவலை நம்மிடம் பகிர்கிறார்.

அம்மாதான் டிசைனர்:

ஸ்கூல் படிக்கும்போதிலிருந்தே எனக்கு ஃபேஷன் மேலே ஆர்வம் அதிகம். நடிக்க வர்றதுக்கு முன்னாடி மாடலிங் பண்ணிட்டிருந்தேன் அப்போவே ஆன்லைனில் என்ன டிரண்டுன்னு பார்த்துட்டே இருப்பேன். ஸ்கூலுக்கு எந்த அக்ஸசரிஸூம் போட்டுட்டுப் போக முடியாது. ஆனால், இனி அப்படி இல்லை. என்ன டிரண்டுன்னு பார்த்து ஒரு செட் வாங்கிடுவேன். என் வார்ட்ரோப்பில் ஆக்ஸசரிஸுக்குத் தனி இடம் இருக்கு. டிரஸ் விஷயத்தில் என் அம்மா செலக்‌ஷனை அடிச்சுக்க முடியாது. நான் சீரியலில் அணிந்துவரும் ஆடைகள் எல்லாமே அம்மா செலக்‌ஷன்தான். எனக்குப் பொருத்தமாக இல்லைன்னு நினைச்சால், `அம்மா இது எனக்கு செட் ஆகாது'னு சொல்லிடுவேன். உடனே அம்மா ஆல்டர் பண்ணிக்கொடுத்துடுவாங்க. எல்லா கிரடிட்ஸும் அம்மாவுக்குத்தான்.''

ஷிவானி

சீரியல் டிரஸ்ஸிங்:

`பகல் நிலவு' சீரியலின் ஆரம்பத்தில் வெஸ்டர்ன் டிரஸ், அப்புறம் தாவணி, இப்போ புடவை என மூன்று விதமான காஸ்டியூம்களில் வெரைட்டி காட்டும் சான்ஸ் கிடைச்சிருக்கு. வெஸ்டர்னில் பார்த்துட்டிருந்த மக்கள் தாவணியில் ஏற்றுக்கொள்வார்களா என்ற குழப்பம் இருந்துச்சு. ஆனால், என்னை எல்லாவிதமாகவும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். பாவடை தாவணி அணியும்போது, ரெகுலரான மாடலில் அணியாமல் நிறைய சிக்வன்ஸ் டிசைன்ஸை செலக்ட் பண்ணிப்பேன். கலாம் காரி மெட்டீரியலில், போட் நெக் பிளவுஸ், கட் ஒர்க் பிளவுஸ், மல்டி கலர் பிளவுஸ் என பிளவுஸ்களிலும் வெரைட்டி காட்டினேன். இந்த மெனகிடல்களுக்கு நிறைய ரசிகைகள் கிடைத்திருக்காங்க.

அசத்தலான அக்ஸசரிஸ்:

பொதுவா, சீரியல் நடிகைகள் அதிகமான நகைகள் அணிய விரும்பமாட்டாங்க. ஆனால், எனக்கு அக்ஸசரிஸ் ரொம்பப் பிடிக்கும். நாம் எப்படிப்பட்ட ஆடைகளை செலக்ட் பண்ணினாலும், ஜூவல்லரியை பர்ஃபெக்ட்டாக செலக்ட் பண்ணிட்டால் போதும். நீட் லுக்கில் ஜொலிக்கலாம். இப்போ, சீரியலில் எனக்கு டிரெடிஷனல் டிரஸ் என்பதால், அதற்கேற்ற ஜிமிக்கி, பாலி கம்மல்கள், லோரியல் லாங் இயர் ரிங், ஹேண்ட் மேட் நெக் பீஸ், டிசைனர் நெக் பீஸ், ஹெம்ப் ஸ்டோன் நகைகள் என இப்போ டிரண்டில் இருக்கும் எல்லா நகைகளையும் பயன்படுத்தறேன்.

ஷிவானி

கலர் காம்போ:

எனக்கு ஊதா வண்ணம் ரொம்பப் பிடிக்கும். ஆனால், இன்டர் மீடியட் மிக்ஸ் மேட்ச் செய்ததையே சீரியலில் பயன்படுத்தறேன். இந்த இன்டர் மீடியட் கலர்ஸை மிக்ஸ் மேட்ச் செய்து பயன்படுத்தினால் எல்லோருக்கும் எடுப்பாக இருக்கும். பிரைட் லுக்கும் கொடுக்கும்.

செலிபிரட்டி டிரஸ்ஸிங்:

எனக்கு தீபிகா படுகோனேவின் டிரஸ்ஸிங் ரொம்பப் பிடிக்கும். எந்த டிரஸ்ஸிலும் நீட் லுக் கொடுக்கும் அவங்க ஸ்டைல் வேற லெவல். அவங்களை மாதிரி சில நேரங்களில் முயற்சியும் செய்து பார்த்திருக்கிறேன்.

ஃபேவரைட் டிரஸ்:

பொதுவா, வெஸ்டர்ன் டிரஸ்தான் பிடிக்கும். அதுதான் கம்ஃபர்டபிளும். என் வார்ட்ரோப் நிறைய வெஸ்டர்ன் டிரஸ்தான் நிறைஞ்சு இருக்கும். இந்த பிராண்டு என இல்லாமல், மனசுக்குப் பிடிச்சதை எல்லாம் வாங்கிடுவேன். நான் உயரமாக இருக்கிறதால், எல்லாவிதமான ஆடைகளுமே எனக்கு செட் ஆகும். ஸோ, மனசுக்குப் பிடிச்சுட்டால் போதும். பில் போட்டுருவேன்.

பிக் பாஸ் 3-வது நாள் மீம் ரிவ்யூ!


டிரெண்டிங் @ விகடன்