`சர்கார்!’ : விஜய் - முருகதாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..! #Sarkar

`துப்பாக்கி’, `கத்தி’ படத்துக்குப் பிறகு, மூன்றாவது முறையாக விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்திருக்கிறது. விஜய்யின் 62 வது படமான இதில், அவருக்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி, யோகி பாபு, ராதாரவி, பழ.கருப்பையா எனப் பலர் நடித்திருக்கிறார்கள். 

சர்கார்

`துப்பாக்கி’, `கத்தி’ படங்களைப் போலவே இந்தப் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என முன்னரே அறிவித்திருந்த நிலையில், இன்று படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்க் லுக்கை வெளியிட்டிருக்கிறார்கள். `சர்கார்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் தாடியுடன் இடம்பெற்றுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாகக் கலாநிதிமாறன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். `உதயா’, `அழகிய தமிழ் மகன்’, `மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஜய் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். 

 

இந்தப் படத்துக்கு க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார். நாளை (ஜூன் 22) விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு விருந்தாக இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு அவர்களைக் குஷிப்படுத்தியுள்ளார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!