வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (21/06/2018)

கடைசி தொடர்பு:19:08 (21/06/2018)

வெளியானது `சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - சாதனை படைக்கத் தயாராகும் விஜய் ரசிகர்கள்! #Sarkar

நடிகர் விஜய், தனது 45-வது பிறந்தநாளை (ஜூன் 22) கொண்டாடவிருக்கிறார். அவருக்கு முன்னரே அவரது ரசிகர்கள், அவரது பிறந்தநாளை பலருக்கும் உதவிகள் செய்வதன்மூலம் கொண்டாடிவருகின்றனர்.

விஜய்

தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவருகிறார். ஹை-ஆக்‌ஷன் அரசியல் த்ரில்லராக இப்படம் தயாராகிவருகிறது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு `சர்கார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது. விஜய் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானதால், மற்ற படக்குழுவினர் தங்கள் படங்களின் அறிவிப்புகள் மற்றும் டிரெய்லர், டீஸர் வெளியீடுகளைத்  தள்ளி வைத்துள்ளனர்.

இதனிடையே, விஜய்க்கான பிறந்தநாள் வாழ்த்தை ஒரு மில்லியன் ட்விட்டர் கணக்காளர்களைக்கொண்டு பதிவிட்டு சாதனை படைக்க விஜய் ரசிகர்கள் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சாதனையைத்  தங்கள் அபிமான நட்சத்திரம்  விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக அளிக்கவும் தயாராகிவருகின்றனர்.