வெளியிடப்பட்ட நேரம்: 05:32 (22/06/2018)

கடைசி தொடர்பு:08:10 (22/06/2018)

விஜய் நெக்ஸ்ட் சி.எம்..! அதிரடி கிளப்பும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் நடிகர்கள் கமல் புதுக் கட்சி துவங்கி முழுநேர அரசியல்வாதியாகவே மாறிவிட்டார்.  அடுத்து ரஜினிகாந்தும் அரசியல் இயக்கம் துவங்கும் வேலைகளைத் துவங்கியுள்ளார். இவர்கள் வரிசையில் நடிகர் விஜய்யும் புதுக்கட்சி தொடங்கப் போவதாக அடிக்கடி தகவல் வெளியாகின்றன.

விஜய்

இந்நிலையில் நடிகர் விஜய், தனது 44-வது பிறந்தநாளைக்  கொண்டாடுகிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரசிகர்கள் அவரது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் விஜய் அறிவித்திருந்தார். ஆனாலும், விஜய்யை நாளைய முதல்வரே! எனத் தமிழக சட்டமன்றத்துடன் அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் திருச்சியில் ஒட்டப்பட்டுள்ளன. தமிழினத்தைக் காக்க வந்த தலைவா, தமிழகத்தை ஆளவா! என்றும், தமிழகப் போராட்டங்களுக்கு முடிவு கட்ட தமிழா நெக்ஸ்ட் சி.எம் ஆக நீங்க வந்தா பெஸ்ட், நீட் தேர்வுக்கு எதிர்பார்க்காமல், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்பார்க்காமல், வியக்க வைத்த விவசாயிகளின் எதிர்பார்ப்போடு தமிழகம் நாளை உனது கையில் என அச்சடிக்கப்பட்ட போஸ்டர்களை ஒட்டிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். 

மேலும், திருச்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருச்சி, ஜங்ஷன், சத்திரம் பகுதிகளில், ``இது தேர்தல் அறிக்கையல்ல, தமிழகத்துக்குத் தேவையான அறிக்கை என்பது போன்று அறிக்கைகள் இடம்பெற்றுள்ளன. நீட் தேர்வில் விலக்கு அளிக்கப் போராட்டம் நடத்தப்படும், கல்விக் கடன் ரத்து செய்யப்படும், பெட்ரோல் டீசல்களுக்கான மாநில வரியை ரத்து செய்யப்படும், அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருள்கள் விலைகுறைக்கப்படும், விவசாயக் கடன் ரத்து செய்யப்படும், விவசாயி கடன் தள்ளுபடி செய்யப்படும், கிரானைட், கல்குவாரிகள், எல்லாம் முழுமையாக அரசு உடைமையாக்கப்படும். போர்கால அடிப்படையில் கிராமப்புற, நகர்ப்புற சாலைகள் எல்லாம் நவீனமயமாக்கப்படும் என்று அறிக்கை வடிவில் விஜய் பிறந்தநாள் போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

பற்றாக்குறைக்கு விஜய் தலைமை மன்றத்தின் சார்பில் திருச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாமில், தி.மு.க முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருச்சி மேற்கு எம்.எல்.ஏவுமான கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதுவே பல விவாதங்களை திருச்சி அரசியலில் உருவாக்கி உள்ளது.

தளபதி விஜய் வருங்காலத்தில் முதல்வராக வர வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்படுவது குறித்து விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்-ன் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் டிராஃபிக் ராமசாமி படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய அவர், 'தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்கள் வாடிக்கொண்டிருக்கும்போது தனது பிறந்தநாளை கொண்டாட விஜய் விரும்பவில்லை என்றும், அதேபோல தனது ரசிகர்களையும் தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று அன்புக் கட்டளையிட்டுள்ளார். வருடா வருடம் தளபதி விஜய்யின் பிறந்தநாளின்போது அவரது ரசிகர்கள் பிரமாண்ட போஸ்டர்கள், கட்-அவுட் என அதகளம் செய்துவிடுவது வழக்கம். அப்போது போஸ்டரில் விஜய்யை வருங்கால முதல்வரே என வாசகங்கள் போடுவது குறித்து கருத்து தெரிவித்த எஸ்.ஏ. சந்திரசேகர்.

ரஜினியின் ரசிகர்கள், வருங்கால முதல்வரே என ரஜினியை வாழ்த்திப் பல வருடங்களாக அடிக்கிறார்கள். ஒரு தந்தையாக என் மகன் இந்த நாட்டில் முக்கியமான நபராக ஆக வேண்டும் என்று விரும்புகிறேன். அதை அவர் அரசியல் மூலம் செய்வாரோ இல்லை வேறு துறை மூலம் செய்வாரோ அது எனக்குத் தெரியாது. அது விஜய்யின் விருப்பம் என்று எஸ்.ஏ.சி  தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், விஜய் தமிழகத்தின் முதல்வராகி ஆட்சி செய்ய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் அப்படி நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை என எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க