வெளியிடப்பட்ட நேரம்: 09:22 (22/06/2018)

கடைசி தொடர்பு:10:42 (22/06/2018)

இந்தியாவின் முதல் சிம்பான்ஸி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது!

ஜீவா, யோகிபாபு, சதீஷ், ராதாரவி ஆகியோர் நடிப்பில் இயக்குநர் டான் சாண்டி இயக்கத்தில் தயாராகி வரும் ‘கொரில்லா’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது. தெலுங்கில் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்த ஷாலினி பாண்டே ஜீவாவுக்கு ஜோடியாக தமிழில் இந்த படம் மூலம் அறிமுகமாகிறார். இவர்களுடன் தாய்லாந்தைச் சேர்ந்த `காங்’ என்ற சிம்பான்ஸி நடித்துள்ளது 

சிம்பாண்ஸி

விக்ரம் வேதா, மேயாத மான் படங்களில் நடித்த விவேக் பிரசன்னா, `நான் கடவுள்' ராஜேந்திரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ். இசையமைக்க, ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். ஹாலிவுட் பட பாணியில் சிம்பான்ஸியின் உதவியுடன் ஜீவா மற்றும் குழுவினர் எப்படி வங்கியை கொள்ளையடிக்கிறார்கள், ஏன் இதைச் செய்கிறார்கள் என முழு நீள காமெடிப் படமாக தயாராகி வருகிறது. நல்ல படங்களை ரசிகர்களுக்கு அளித்து வந்த ஜீவா, இப்படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கலாம்.