'எனக்கும் சங்கடங்கள் நேர்ந்தன!'- நடிகை ஹனி ரோஸ் சொல்வது என்ன?

சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாள சினிமாவிலும் உண்டு என கேரள நடிகை ஹனி ரோஸ் தெரிவித்தது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

நடிகை ஹனி ரோஸ்

பாலிவுட் சினிமாக்களில் நடிக்கும் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் அவலம் இருப்பதாக ராதிகா ஆப்தேயும். தெலுங்கு சினிமா உலகமான டோலிவுட்டிலும் இந்த நிலை இருப்பதாக நடிகை ஸ்ரீரெட்டியும், மலையாள சினிமாக்களிலும் சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக நடிகை பார்வதியும் ஏற்கெனவே கூறியிருந்தனர். இந்த நிலையில், மலையாள சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் நிலைத்து நிற்கிறது எனவும், நாம் திடமாக இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை என நடிகை ஹனி ரோஸ் கூறியிருப்பது மலையான சினிமாவை அதிரவைத்துள்ளது. இதுகுறித்து நடிகை ஹனி ரோஸ் கூறுகையில், ``புதுமுக நடிகைகள் பிரபலம் ஆகும் வரை பல இக்கட்டான சூழ்நிலைகளை சகித்துக்கொள்ளும் சூழ்நிலை உள்ளது.

இரட்டை அர்த்தப் பேச்சுக்கள் போன்ற சங்கடங்கள் ஆரம்பகாலத்தில் எனக்கும் ஏற்பட்டது. என்னை பிரைன்வாஷ் செய்ய முற்பட்டவர்களும் உண்டு. ஆனால், என்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்ததால் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மட்டும்தான் நான் கூறுகிறேன். படப்படிப்பின்போதும், வெளியே செல்லும்போதும் என் பெற்றோர் உடன் இருந்தது எனக்குப் பாதுகாப்பாக இருந்தது" என்றார். 2005-ம் ஆண்டு 'பாய் பிரண்ட்' மலையாள சினிமாவில் அறிமுகமான ஹனி ரோஸ் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்குப் படங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!