தவறை கண்டித்த அனுஷ்காவுக்கு கிடைத்த நீதிமன்ற நோட்டீஸ்!

குப்பையை சாலையில் கொட்டியதை கண்டித்த அனுஷ்கா சர்மா,விராட்கோலி ஆகிய இருவருக்கும் அந்த நபர் நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அனுஷ்கா

பாலிவுட் நடிகையும் இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா மும்பை நகரில் காரில் சென்றுகொண்டிருக்கும் போது அருகில் மற்றொரு காரில் சென்ற ஒருவர் குப்பையை சாலையில் வீசியுள்ளார். அனுஷ்கா அந்த காரை அருகில் வரவழைத்து குப்பையை, குப்பைத் தொட்டியில் மட்டுமே போடவேண்டும் சாலையில் போடக்கூடாது என கடிந்துகொண்டார். இந்த வீடியோவை அனுஷ்காவின் கணவர் விராட் கடந்த ஜூன் 16-ம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவுக்கு விராட் கோலி மற்றும் அனுஷ்கா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. 

இதனையடுத்து அனுஷ்கா சர்மா கடிந்துகொண்ட அந்த நபர், பகுதிநேர நடிகர் அர்ஹான் சிங் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சமூகவலைதளங்களில் தன்னை அவமானப் படுத்திவிட்டதாகவும் அதற்கு விளக்கம் கேட்டும் அனுஷ்கா மற்றும் விராட் ஆகிய இருவருக்கும் அர்ஹான் நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!