வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (25/06/2018)

கடைசி தொடர்பு:14:15 (25/06/2018)

`16 போட்டியாளர்கள்; 60 கேமராக்கள்' - தொடங்கியது மலையாள பிக்பாஸ்..!

தமிழைப் போல் மலையாளத்திலும் `பிக்பாஸ்' நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர் மோகன்லால் இதைத் தொகுத்து வழங்குகிறார்.

மோகன்லால்

இந்தி, தமிழ், தெலுங்கு மக்களைத் தாக்கிய `பிக்பாஸ் ஃபீவர்' தற்போது மலையாள கரையோரத்தையும் தாக்கியுள்ளது. ஆம் கேரளாவிலும் `பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை மலையாள சினிமாவின் பிக்பாஸ் மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இதில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். கேரளாவின் முன்னணி நடிகையாகவும், தமிழில் 'அரவான்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்வேதா மேனன், நடிகைகள் நேகா சக்சேனா, ஹிமா ஷங்கர், பீலி மானே, அர்ச்சனா கவி, இவர்களுடன்  2000-ம் ஆண்டில் 'மிஸ் கேரளா' பட்டம் பெற்ற ரஞ்சினி ஹரிதாஸ், 'கிஸ் ஆப் லவ்' போராட்டத்தின் முக்கிய காரணகர்த்தாவாக விளங்கிய தியா சனா ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். இதேபோல் 'ஆக்ஷன் ஹீரோ பைஜூ' புகழ் அரிஸ்டோ சுரேஷ், காமெடி நடிகர் அனூப் சந்திரன், 'பதியே' ஆல்பம் புகழ் பசீர், சீரியல் நடிகர்கள் தீபன் முரளி, ஸ்ரீ லட்சுமி உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர். 

தமிழைவிட அதிகப்படியான வசதிகளுடன் அங்கு பிக்பாஸ் வீடு அமைக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளம், ஜிம் வசதிகளுடன் பிக்பாஸ் வீடு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு அமைக்கப்பட்ட 60 கேமராக்கள் 16 பேரையும் கண்காணிக்க உள்ளது. கேரளாவின் பிரபல தொலைக்காட்சியான ஏசியாநெட் தனது 25-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. இதனால் கேரள ரசிகர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கத் தொடங்கியுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க