'இந்த இரண்டு விஷயத்தை அப்பாவிடம் இருந்து கத்துக்கிட்டேன்'- கௌதம் கார்த்திக் உருக்கம்

கார்த்திக், கௌதம் கார்த்திக் நடிப்பில் இயக்குநர் திரு இயக்கத்தில் வெளி வரவுள்ளத் திரைப்படம் மிஸ்டர் சந்திரமௌலி. ரெஜினா கஸாண்ட்ரா, சதிஷ், வரலக்ஷ்மி, இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜூலை 6-ம் தேதி இப்படம் வெளிவரவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரமோஷனாக ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் செயலி ஒன்று லான்ச் செய்யப்பட்டது. இந்த ஆப் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்தால் நிச்சயப் பரிசுகள் உண்டு என படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் அறிவித்தார்.

கௌதம் கார்த்திக்

முன்னதாக பேசிய நாயகன் கௌதம் கார்த்திக், ``இப்படம் எனக்கு மறக்க முடியாத ஒரு படமாக அமைஞ்சுது. அப்பாவுடன் (கார்த்திக்) நடிக்குறதுக்கான வாய்ப்பு கிடச்சுது. எனது முந்தையப் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் அப்பாக்கூட வேலை பார்த்தவங்க ‘அப்பா இப்படி பண்ணுவார், அப்பா வந்தா கலகலன்னு இருக்கும், அப்பா அப்படி, அப்பா இப்படினு சொல்லிக்கிட்டே இருப்பாங்க'. நான் சின்ன வயசுல இருந்து ஊட்டியிலேயே வளர்ந்தேன். அதனால வருஷத்துக்கு ஒரு முறைதான் அப்பாவை பார்க்கமுடியும். அப்படி இருந்த நிலையில், எனக்கு அவரைப் பத்தியும் இந்த சினிமா துறையைப் பத்தியும் பெருசா தெரிஞ்சிக்க முடியல.

மிஸ்டர் சந்திரமௌலி

‘கடல்’ படத்து ஷூட்டிங்கலதான் எனக்கு அப்பாவுக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டுச்சு. அதுக்குப் பிறகு இந்தப் படத்தில் ஒண்ணா சேர்ந்து நடிக்கும்போதுதான் எனக்கு அப்பாவை ஒரு சக நடிகராய் பார்க்க முடிஞ்சது. அவரைப் பத்தி மத்தவங்க சொன்ன எல்லாத்தையும் உணர முடிஞ்சது. அவரு எனக்கு அப்பான்னு இதெல்லாம் சொல்லல உண்மையிலேயே ஒரு சக நடிகரா கார்த்திக்கிட்ட எப்படி எல்லாரையும் பாத்துக்கணும், சந்தோஷமா வச்சிக்கணும்னு கத்துக்கிட்டேன்”  என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!