சைக்கோவாக அனுராக் காஷ்யப் மிரட்டும் `இமைக்கா நொடிகள்’ ட்ரெய்லர்..!

சைக்கோவாக அனுராக் காஷ்யப் மிரட்டும் `இமைக்கா நொடிகள்’ ட்ரெய்லர்..!

`டிமான்ட்டி காலனி' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அஜய் ஞானமுத்து எடுத்திருக்கும் திரைப்படம் 'இமைக்கா நொடிகள்'. இந்தப் படத்தில் நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கண்ணா, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.

இமைக்கா நொடிகள்

ஹிப்ஹாப் தமிழா இசையில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படம் சைக்கோ த்ரில்லராக உருவாகியிருக்கிறது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவிலும் புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பிலும் உருவாகியுள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

டிரெய்லரிலேயே சைக்கோவாக மிரட்டியிருக்கும் அனுராக் காஷ்யப், படத்திலும் வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என்பது உறுதியாகத் தெரிகிறது. போலீஸான நயன்தாராவும் அவரின் தம்பியாக அதர்வாவும் நடித்திருக்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!