ஆதிக் ரவிச்சந்திரனை இயக்கும் 'ஹர ஹர மஹாதேவகி' இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் !

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன், சிம்புவை வைத்து 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படத்தின்போது இவருக்கும் நடிகர் சிம்புவுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு சர்ச்சையாகி, பின் இருவரும் சமாதானமாகினர்.

ஆதிக் - சந்தோஷ்

அதன் பிறகு, ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து ரொமான்டிக் ஃபேன்டஸி ஜானரில் 3டி படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள். எப்போதும் தன் படங்களில் முன்னாள் ஹீரோயின்களை நடிக்க வைக்கும் ஆதிக், இந்தப் படத்தில் சோனியா அகர்வாலை நடிக்கவைக்க இருக்கிறார்.

இயக்கம் மட்டுமல்லாது நாயகனாகவும் அவதாரம் எடுக்க இருக்கிறார் ஆதிக் என்பது தான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் 'டாக்' .  ஆதிக் நாயகனாக நடிக்கும் படத்தை 'ஹர ஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' போன்ற அடல்ட் காமெடிப் படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார் இயக்குகிறார். அந்தப் படத்தின் பெயர் 'டிங் டாங் பெல்' என வைக்க இருக்கிறார்களாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!