வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (29/06/2018)

கடைசி தொடர்பு:15:05 (29/06/2018)

நான் வீட்டோட சம்பந்தியா வந்துடுறேன்... தம்பி ராமையா இயக்கியுள்ள 'மணியார் குடும்பம்' டிரெய்லர்

தமிழில் முரளி நடித்த 'மனுநீதி' திரைப்படம்மூலம் இயக்குநராக அறிமுகமானவர், தம்பி ராமையா. பிறகு, பல படங்களில் நடித்து தனக்கென ஓர் இடத்தை உருவாக்கியுள்ளார்.  `மைனா' படத்துக்காக இவர் தேசிய விருது பெற்றார். வடிவேலுவை வைத்து  'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது, அவரின் மகன்  உமாபதியை கதாநாயகனாக வைத்து  'மணியார் குடும்பம்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

தம்பி ராமையா

டான்ஸ், ஃபைட் என கலக்கும் உமாபதிக்கு ஜோடியாக, மிருதுளா முரளி, 'பிக்பாஸ்' யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி நடிக்கிறார். காதல், ஆக்‌ஷன், காமெடி என முழுநீள என்டர்டெய்னராக இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் தம்பி ராமையா. பி.கே.வர்மா ஒளிப்பதிவுசெய்து கதை, திரைக்கதை எழுதியதுடன், அவரே இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை மற்றும் பாடல்கள் இன்று வெளியானது.