வெளியிடப்பட்ட நேரம்: 19:33 (29/06/2018)

கடைசி தொடர்பு:20:22 (29/06/2018)

`நானாகிய நதிமூலமே...’ - `விஸ்வரூபம் 2' படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது!

2013-ம் ஆண்டில் பல சிக்கல்களுக்குப் பிறகு வெளியான `விஸ்வரூபம்’ படத்தின் தொடர்ச்சியான `விஸ்வரூபம் 2’ படத்தின் பணிகளும் பரபரப்பாக நடைபெற்று வந்தது. பிறகு, பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு நின்றது. சமீபத்தில் தொடங்கிய இதன் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள் வைரலாகின. படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் படத்துடைய தமிழ் வெர்ஷன் ட்ரெய்லரை ஸ்ருதிஹாசனும் இந்தி வெர்ஷனை அமீர்கானும் தெலுங்கு வெர்ஷனை ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிட்டனர். 

கமல்ஹாசன் - விஸ்வரூபம் 2

2015-ல் வெளியான `தூங்காவனம்' படத்துக்குப் பிறகு, கமல்ஹாசன் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், 'விஸ்வரூபம் 2' படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. மக்கள் நீதி மய்யம், பிக் பாஸ் என பிஸியாக இருக்கும் கமல்ஹாசன், படத்தின் முதல் பாடலை பிக் பாஸ் ஷோவில் வெளியிட இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி, படத்தின் 'நானாகிய நதிமூலமே' என்று தொடங்கும் சிங்கிள் டிராக் தற்போது வெளியாகி இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க