அஞ்சனா இப்போது அம்மா!

குழந்தை பெற்றெடுத்துள்ளார் ஆங்கர் அஞ்சனா

'சூரிய வணக்கம்' உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, டி.வி காம்பியரிங்கில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தைக் கொண்டவர், ஆங்கர் அஞ்சனா. டி.வி நிகழ்ச்சிகள் போக ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளையும் பரவலாகத் தொகுத்து வழங்கிவந்தார். 'கயல்' படத்துக்காக விருது வாங்கச் சென்ற நடிகர் சந்திரனுக்கு, அந்த நிகழ்சியைத்  தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அஞ்சனா மீது காதல். சந்திரனே முதலில் புரப்போஸ் பண்ண, சில நாள்களுக்குப் பிறகு அதை ஏற்றுக்கொண்டார் அஞ்சனா. பிறகு, இரு வீட்டார் சம்மதத்துடன் 2016ல் திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பிறகு டி.வி-க்கு பிரேக் எடுத்துக்கொண்ட அஞ்சனா, கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமடைந்தார். தொடர்ந்து முறையான கர்ப்பகாலப் பரிசோதனைகளை எடுத்து வந்தவருக்கு, சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், இரு தினங்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 'நார்மல் டெலிவரி' என்பதால், தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துவிட்டார்.

அஞ்சனா

நலமுடன் இருக்கிற தாயையும் சேயையும் அஞ்சனா மற்றும் சந்திரன் குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துவருகிறார்கள். வாழ்த்துகள் அஞ்சனா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!