வெளியிடப்பட்ட நேரம்: 06:49 (04/07/2018)

கடைசி தொடர்பு:09:58 (04/07/2018)

'நான் யாருமில்லை' 'தமிழ்ப் படம் 2' - சிங்கிள் டிராக் பாடலின் வரிகள் இதோ

கடந்த மாதத்தில் வெளிவந்த ஒரு படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் டிராக், யூடியூபில் படு வைரலாகிவிட்டது; ஆம், 'தமிழ்ப் படம் 2' படத்தைத் தான் சொல்கிறேன். படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர்களில் இருந்தே தனது டிரேட்மார்க் அட்ராசிட்டியை ஆரம்பித்திருந்தார், படத்தின் இயக்குநரான சி.எஸ். அமுதன் (எந்திரன் 2.0 மற்றும் பன்னீர் செல்வம் குறியீடு - Official Piracy Partner தமிழ் ராக்கர்ஸ்), பின்னர் என்ன நினைத்தாரோ, தனது படத்தின் பெயரை 'தமிழ்ப் படம் 2' ஆக அவர் மாற்றிவிட்டார்.

தமிழ்ப் படம் 2

முதலில் வெளியான 42 விநாடிகள் ஓடக்கூடிய டீசர் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், பிறகு, 'நான் யாருமில்லை' என்ற சிங்கிள் டிராக்கையும் படக்குழு யூடியூபில் ரிலீஸ் செய்தது. இது எல்லாவற்றிலுமே ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சிம்பு, சூர்யா, விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என சமகாலத்து ஹீரோக்கள் அனைவரும் கலாய்க்கப்பட்டுள்ளனர்! 36 லட்சம் வியூஸ்களை எட்டிப்பிடிக்கப்போகும் இந்தப் பாடலின்  வரிகள் உங்கள் பார்வைக்கு.

Tamizh Padam 2

சுனாமியின் பினாமியே 
குள்ள நரிகளை ஒழிக்கும் நல்லவனே
ஒரு ஆணியும் புடுங்க வேணாம்!

என்னை விட்டுடுங்க , ப்ளீஸ் என்ன விட்டுடுங்க
என்னை விட்டுடுங்க , ப்ளீஸ் ப்ளீஸ் என்ன விட்டுடுங்க
நான் யாரும் இல்ல நான் எதுவும் இல்ல
நான் வொர்த்தேயில்ல நான் எதுவும் செய்ய மாட்டேன்
எனக்கு ஊரும் இல்ல ஒரு பொழப்பு இல்ல
எனக்கு அறிவும் இல்ல, நான் எதுவும் எதுவும் கிழிக்க மாட்டேன்
எனக்கு  mass இல்ல , Velocity இல்ல, Volume இல்ல , Gravity இல்ல
நான் Lion இல்ல , Tiger இல்ல , Giraffe இல்ல , Zebra-வும் இல்ல

"பருப்புடா"

Tamizh Padam 2

PETA  வந்தா எனக்கென்ன? 
மீதேன் எடுத்தா எனக்கென்ன?
நான் வாயே தொறக்க மாட்டேன் 
வாயே தொறக்க மாட்டேன்

எனக்கு U வேணும் 
Tax free வேணும்
மாஸ் ஓப்பனிங் வேணும் 
அது மட்டும் போதும்

எனக்கு U வேணும் 
Tax free வேணும் 
மாஸ் ஓப்பனிங் வேணும் 
அது மட்டும் போதும்

நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற 
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

வர்லாம் வர்லாம் வா , வர்லாம் வா, வர்லாம் வா

வர்ரேம்மாஆஆஆ

Tamizh Padam 2

நான் எப்போ வருவேன் 
எங்க வருவேன்
அங்க எப்படி வருவேன்னு தெரியாது
எதுக்கு வருவேன்னு தெரியாது
ஏன்னா நான் வரவே மாட்டேன்

இது தானா சேர்ந்த கூட்டம் இல்ல 
எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட்

தமிழ் பாலும் இல்ல 
தெலுங்கு பாலும் இல்ல
என்ன வாழ வைத்தது ஆவின் பால்லு

எலக்ஷன் வந்தா பேச மாட்டேன் 
ட்விட்டர்ல கருத்து போட மாட்டேன்
அரசியலில் நான் குதிக்க மாட்டேன் 
பீச்ல தியானம் பண்ண மாட்டேன்

எனக்கு நடிக்கத் தெரியாது 
எங்கப்பா எனக்கு சொல்லி தரல
Well ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
நான் USA கிளம்பி போயிடுவேன்

Tamizh Padam 2

வாழு வாழு வாழவிடு
Slow Motion walk-ல தெறிக்கவிடு

நானும் நீயும் நண்பேன்டா 
தூக்கி அடிச்சிடுவன் பாத்துக்க

நான் டி.வில இருந்து வந்தவன்டா 
ஏன் producer-க்கு பாவம் காரே இல்லடா

ஏன் உயிர் மூச்சு சங்கம்டா 
மண்டபம் கட்டிட்டுதான் என் கல்யாணம்டா

நான் தலைவன் இல்லடா 
அதுக்கு ஆசை இல்லடா
ஒரு மன்றம் இல்லடா 
அத கலைச்சிட்டேன்டா

நான் ரொம்பப் பேசித்தான் கைல படமே இல்லடா
கொஞ்சம் திரும்பி வந்துட்டேன் இப்போ கால்சீட் இல்லடா

இது அட்டாக் பண்ற சிவா
இது தகராறு பண்ற சிவா
இது கில்மா பண்ற சிவா
இது டேமேஜ் பண்ற சிவா
இது ஐடியா பண்ற சிவா
இது அசால்ட் பண்ற சிவா
இது அட்டாக் பண்ற சிவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க