வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (04/07/2018)

கடைசி தொடர்பு:15:40 (04/07/2018)

த்ரிஷாவை ஓவர்டேக் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ் 'சாமி ஸ்கொயர்' ட்விஸ்ட் 

விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குநர் ஹரி, விக்ரம் கூட்டணியில் `சாமி’ திரைப்படம் 2003-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்றது. தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகம் 'சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ், பிரபு, பாபி சிம்ஹா, சூரி, இமான் அண்ணாச்சி, ஜான் விஜய் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். முதல் பாகத்தில் த்ரிஷா நடித்த புவனா கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஆரம்பத்தில், முதல் பாகத்தைப் போலவே இப்படத்துக்கும் த்ரிஷா கதாநாயகியாக ஒப்பந்தமானார். மற்றொரு முக்கியமான கதாபாத்திரமாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கருத்து வேறுபாடுகள் காரணமாகக் கடந்த ஜனவரி மாதம் த்ரிஷா படத்திலிருந்து வெளியேற, யார் அந்த வேடத்தில் நடிப்பது என்ற கேள்வி இருந்து வந்தது. இந்நிலையில், செக்க சிவந்த வானம், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இக்கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குநர் ஹரி, ஐஸ்வர்யாவுக்கும் விக்ரமுக்கும் இடையேயான காட்சிகள் மற்றும பாடல் காட்சிகளையும் பழனியில் படமாக்கி வருகிறார்.