Published:Updated:

கேரள நடிகர் சங்கம் உடைகிறது? இளம் நடிகர்கள் இணைந்து செயல்பட முடிவு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கேரள நடிகர் சங்கம் உடைகிறது? இளம் நடிகர்கள் இணைந்து செயல்பட முடிவு!
கேரள நடிகர் சங்கம் உடைகிறது? இளம் நடிகர்கள் இணைந்து செயல்பட முடிவு!

கேரள நடிகர் சங்கம் உடைகிறது? இளம் நடிகர்கள் இணைந்து செயல்பட முடிவு!

கேரள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரள இளம் நடிகர்கள் தனியாக செயல்பட முடிவு செய்துள்ளனர். அதனால் கேரள நடிகர் சங்கம் உடையும் நிலை உருவாகியுள்ளது. 

கடந்த ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி கேரள முன்னணி நடிகையை காரில் கடத்திய கும்பல், அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதுடன் அதை வீடியோவாகவும் பதிவு செய்தது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரில் நடிகர் திலீபையும் போலீஸார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து திலீப் கேரள நடிகர் சங்க அமைப்பான ‘அம்மா’வில் இருந்து நீக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 85 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் ஜாமீனில் விடுதலையான நடிகர் திலீப் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டார். சங்கத்தின் தலைவராக மோகன்லால் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையாக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு முன்னணி நடிகைகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக நடிகை ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நடிகைகள் சமூக வலைதளத்தில் எழுப்பிய 7 கேள்விகளுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அம்மா அமைப்பின் முடிவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், கேரள திரையுலகின் இளம் தலைமுறையினர் பலரும் அம்மா அமைப்பின் முடிவை விமர்சித்து வருகிறார்கள். 

நடிகர் ப்ரித்வி ராஜ், இயக்குநர் ராஜீவ் ரவி உள்ளிட்ட 100-க்கும் அதிகமானோர் ஏற்கெனவே அம்மாவின் முடிவைக் கண்டித்து கையெழுத்துப் போட்டு மனு அளித்தார்கள். ஆனால், அம்மா அமைப்பின் செயலாளரான சித்திக் இதுபற்றிக் கூறுகையில், ’நடிகர் திலீப் மீண்டும் அமைப்பில் சேர்க்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யாரும் எதிர் கருத்து தெரிவிக்காமல், தற்போது குறை கூறுகிறார்கள்.” எனக் குறிப்பிட்டார்.

அதனால் நடிகர் சங்கத்துடன் இளம் நடிகர்களுக்குக் கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது. இளம் தலைமுறையினர் அனைவரும் சேர்ந்து தனியாக கேரள நடிகர்கள் சங்கத்தைத் தொடங்க முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கு கேரளாவின் பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு கிடைக்கும் நிலை உருவாகி இருப்பதால் விரைவில் கேரளாவில் புதிய திரைப்பட அமைப்பு உருவாவது தவிர்க்க இயலாதது என திரையுலக வட்டாரத்தினர் தெரிவிக்கிறார்கள். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு