வெளியிடப்பட்ட நேரம்: 19:26 (06/07/2018)

கடைசி தொடர்பு:17:13 (07/07/2018)

தமிழக அரசு எச்சரிக்கை எதிரொலி..! விஜய் புகைபிடிக்கும் `சர்கார்' போஸ்டர் நீக்கம்

விஜய் நடித்துள்ள `சர்கார்' படத்தின் புகைபிடிக்கும் படம் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

சர்கார்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகிறது `சர்கார்' திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 21-ம் தேதி வெளியானது. அதில் நடிகர் விஜய் புகைபிடிப்பதுபோல காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸுக்கு மாநில பொதுச்சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில், 'சர்ச்சைக்குரிய போஸ்டரை நீக்காவிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தமிழக அரசின் எதிர்ப்பைத் தொடர்ந்து, விஜய் புகைபிடிப்பது போன்ற `சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் ட்விட்டர் பக்கம் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் ட்விட்டர் பக்கங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.