`இன்ஸ்டாகிராமில் அதிகம்பேர் பின்தொடரும் இந்தியர்!’ - ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ப்ரியங்கா சோப்ரா

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியைப் பின்னுக்குத் தள்ளி பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 2.5 கோடி ஃபாலோவர்ஸ்களைப் பெற்றுள்ளார்.

ப்ரியங்கா சோப்ரா

பொதுவாகவே சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்கள் முன்னணி வகிப்பது வழக்கம். ஆனால், சில மாதங்களாக சமூக வலைதளங்களில் அதிகம் தேடப்படும் நபர்களாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் இருந்து வந்தனர். இதையடுத்து, தற்போது மீண்டும் சமூக வலைதளத்தை சினிமா பிரபலங்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதன்படி வெளியான சமீபத்திய கணக்கின்படி இளைஞர்கள் அதிகமாகப் பயன்படுத்திவரும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இந்திய அளவில் அதிகம் ஃபாலோவர்ஸ் கொண்டுள்ள பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். உலகம் முழுவதும் 2.5 கோடி ஃபாலோவர்ஸ்களைக் கொண்டு பிரியங்கா முதலிடத்திலும், 2.4 கோடி ஃபாலோவர்ஸ்களைக் கொண்டு தீபிகா படுகோன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இதில் 2.27 கோடி ஃபாலோவர்ஸ்களுடன் விராட்கோலியும், 1.35 கோடி ஃபாலோவர்ஸ்களுடன் நரேந்திர மோடியும் உள்ளனர். ஒரு காலத்தில் பாலிவுட் உலகில் கொடிகட்டிப் பறந்த நடிகர் அமிதாப் பச்சனை இன்ஸ்டாகிராமில் 95 லட்சம் பேர் மட்டுமே ஃபாலோ செய்து வருகின்றனர். இதையடுத்து, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து புகைப்படம் ஒன்றை ப்ரியங்கா சோப்ரா பதிவிட்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!