வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (08/07/2018)

கடைசி தொடர்பு:10:50 (08/07/2018)

மீண்டும் இணைந்து நடிக்கும் சிம்பு ஜோதிகா!

ஜோதிகா நடித்து வரும் 'காற்றின் மொழி' படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு 'நடிகர் சிம்பு'வாகவே நடிக்கிறார்.

ஜோதிகா

'மன்மதன்' படத்தில் சிம்பு-ஜோதிகா கூட்டணி முதலில் ஆரம்பித்தது. பின் 'சரவணா' தற்போது 'செக்க சிவந்த வானம்'  சிம்பு ஜோதிகா இணைந்து நடித்து வருகிறார்கள். சமீபத்தில் தனது நான்கு படங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார் சிம்பு. தற்போது ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் 'காற்றின் மொழி' படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு நடித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் தன்ஞ்செயன் "படத்துல ஜோதிகா ஆர்.ஜேவா நடிக்கிறாங்கன்னு எல்லாருக்கும் தெரியும். அவங்க நடத்துற நிகழ்ச்சிய ஒரு ஸ்டார் பாராட்டுற மாதிரி ஒரு காட்சி இருந்துச்சு. அந்த காட்சில சிம்பு நடிச்சா நல்லா இருக்கும்னு முடிவு செஞ்சு, இந்த ஐடியாவ அவர்ட்ட சொன்னோம். அவரும் ஜோதிகாவின் பெரிய ரசிகர்.  மேடம் நடிக்கறாங்கனா கண்ண்டிப்பா வந்து நடிச்சு தர்றேனு சொன்னாரு. அதேபோல் அது பெரிய சீன் ரொம்ப வேகமாவும், அழகாவும் முடிச்சு தந்தார்" என்றார்.

சிம்பு