ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர் வேடத்தில் மம்மூட்டி நடிக்கும் 'யாத்ரா'

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. மஹி.எஸ்.ராகவ் இயக்கி வரும் இப்படத்துக்கு, `யாத்ரா' எனப் பெயரிட்டுள்ளனர்.

மம்மூட்டி

இந்த படத்தில், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வேடத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி நடிக்கிறார். அவரது மனைவியாக நயன்தாராவையும், மருமகளாக கீர்த்தி சுரேஷையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சுஹாசினி மணிரத்னம் ஆந்திர அமைச்சர் இந்திர சபிதா ரெட்டி கதபாத்திரைத்தில் நடிக்கிறார். ஆந்திர மக்கள் பெருமளவு நேசித்த ஒய்.எஸ்.ஆரின் வாழ்க்கை படமாக்கப்படுவதால்,  இவரது ஆதரவாளர்களும் அபிமானிகளும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 'தீரன்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூர்யன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் கே இசையமைக்க , ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஒய்.எஸ். ஆர் என்று மக்களால் அழைக்கப்பட்ட இவரது பிறந்தநாளை முன்னிட்டு 'யாத்ரா' டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் யார் நடிக்கவுள்ளனர் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!