``இந்திய சினிமா என்றால் பாலிவுட் மட்டுமல்ல... " - 'பேரன்பு' ப்ரோமோவில் இயக்குநர் ராம் ! | first look promo of peranbu is released

வெளியிடப்பட்ட நேரம்: 01:07 (09/07/2018)

கடைசி தொடர்பு:08:11 (09/07/2018)

``இந்திய சினிமா என்றால் பாலிவுட் மட்டுமல்ல... " - 'பேரன்பு' ப்ரோமோவில் இயக்குநர் ராம் !

'தரமணி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'பேரன்பு'. இதில் மம்மூட்டி, அஞ்சலி, 'தங்கமீன்கள்' சாதனா ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவுபெற்று நெதர்லாந்து, பெர்லின், வெனீஸ் உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்குள்ள அனைவர் மனதையும் கவர்ந்ததுள்ளது.

பேரன்பு

இந்நிலையில். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. படத்தின் சில புகைப்படங்களோடு ஷாங்காய் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் 'பேரன்பு' படம் திரையிடப்பட்டு, அந்நாட்டு மக்களின் கேள்விகளுக்கு இயக்குநர் ராம் பதிலளித்த காட்சிகளும் அந்நாட்டு மக்கள் இந்தப் படத்துக்கு கொடுத்த வரவேற்பும் இடம்பெற்றிருந்தது. பி.எல். தேனப்பன் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டீஸர் ஜூலை 15-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க