வெளியிடப்பட்ட நேரம்: 04:40 (09/07/2018)

கடைசி தொடர்பு:07:31 (09/07/2018)

`தீம் மியூசிக் ரெடி... படம் பண்ணுவோமா ?' - சிவகார்த்திகேயனிடம் கேட்ட அனிருத் !

சில தினங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயனின் ஹேர் ஸ்டைலில் மாற்றம் இருந்தது. நிறைய முடி, ஷேவ் செய்யாத தாடி என இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக இருந்தார் சிவகார்த்திகேயன். ஒரு வேளை அடுத்த படத்துக்காக இந்தக் கெட்டப்பில் இருக்கிறாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது. அந்த லுக்குக்கு அனிருத் ட்விட்டரில் ஒரு கமென்ட் செய்துள்ளார். அது தற்போது வைரலாக தொடங்கி இருக்கிறது. 

சிவகார்த்திகேயன்

``எங்கள் 'கனா' படத்தின் ஹீரோ தர்ஷன் சொல்லி, இந்த காஸ்ட்யூமில் போட்டோ ஷூட் பண்ணோம். என்னை புதுவிதமாக காட்டிருக்கும் இந்த லுக், உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்" என்று சிவகார்த்திகேயன், அவரது படத்தை ட்விட்டரில் பதிவிட்டு இதனைக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு, ``இந்தக் கெட்டப்பில் ஒரு படம் பண்ணுவோமா? தீம் மியூசிக் ரெடி!" என கமென்ட் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். வித்தியாசமான லுக்கில் இருக்கும் சிவகார்த்திகேயனின் போட்டோவையும் அனிருத்தின் ட்வீட்டையும் கண்ட அவர்களின் ரசிகர்கள் அதனை ஷேர் செய்து வருகின்றனர். 

அனிருத்

நீங்க எப்படி பீல் பண்றீங்க