`கவலைப்படாதீங்க உங்க அக்கவுன்ட்ல 15 லட்ச ரூபாய் போட்டுறேன்!’ - 'தமிழ்ப் படம் - 2'- வின் இரண்டு நிமிடக் காட்சி #GoBackSanthanaBarathi | Sneak Peek of Tamizh padam 2

வெளியிடப்பட்ட நேரம்: 20:47 (09/07/2018)

கடைசி தொடர்பு:21:09 (09/07/2018)

`கவலைப்படாதீங்க உங்க அக்கவுன்ட்ல 15 லட்ச ரூபாய் போட்டுறேன்!’ - 'தமிழ்ப் படம் - 2'- வின் இரண்டு நிமிடக் காட்சி #GoBackSanthanaBarathi

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா நடித்துள்ள 'தமிழ்ப் படம் - 2'-வின் இரண்டு நிமிடக் காட்சிகளைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

தமிழ் படம் - 2

 

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடித்த `தமிழ்ப் படம்’, கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில்,  எட்டு வருடங்கள் கழித்து அந்தப் படத்தின் அடுத்த பாகத்தை 'தமிழ்ப் படம் 2.0' என்ற பெயரில் தொடங்கியது படக்குழு. ஆனால், திடீரென்று படத்தின் தலைப்பை 'தமிழ்ப் படம் 2' என்று மாற்றினர். படத்தின் போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியாகி சமூக வலைதளங்களில் ஹிட்டடித்த நிலையில், ஒரு பாடலையும் வெளியிட்டனர். `நான் யாருமில்ல’ என்ற அந்தப் பாடல், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், படம் ஜூலை 12-ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் காட்சிகள் முதல் அரசியல் வரை பல்வேறு துறைகளையும் நையாண்டிசெய்து வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் பாடலைத் தொடர்ந்து, படத்தில் இடம்பெற்றுள்ள 2 நிமிடக் காட்சிகளைப் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். 

அதில், ஜி.எஸ்.டி வரி, ரூ.15 லட்சம் அக்கவுன்ட்டில் போடுவது, அணை கட்டுவது தொடர்பாக லிங்காவிடம் பேசியிருக்கிறேன் என்பது தொடங்கி, அமெரிக்க விசாவுக்காக ஸ்டீவ் ஜாப்ஸிடம் (அவர் இறந்து விட்டார் என்ற தகவலும் இருக்கிறது) பேசுகிறேன், ஜல்லிக்கட்டு வரை என ரெஃபரென்ஸுகள் ஏராளம் இருக்கின்றன. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதுபோல அமைக்கப்பட்டிருக்கும் அந்தக் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.