பிரபுதேவாவுக்கு வில்லனாகும் `பாகுபலி' காலக்கேயன்!

பிரபுதேவா முதன்முதலில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்தை, அவரிடம் `வில்லு’, `போக்கிரி’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக இருந்த ஏ.சி முகில் இயக்க இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இவரைத் தொடர்ந்து, இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன் ஆகியோர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிரபுதேவா

மேலும்,  இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு வில்லனாக 'பாகுபலி' படத்தில் காலக்கேயன் வேடத்தில் நடித்த பிரபாகர் நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளது. எப்போதும் தாடியுடனே இருக்கும் பிரபுதேவா இந்தப் படத்துக்கு க்ளீன் ஷேவ் லுக்குக்கு மாறியிருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபுதேவா நடிப்பில் உருவாகி 'சார்லி சாப்ளின் 2', 'லக்ஷ்மி' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!