வெளியிடப்பட்ட நேரம்: 11:48 (10/07/2018)

கடைசி தொடர்பு:11:52 (10/07/2018)

சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பெயர் `மாநாடு'

சிம்பு - வெங்கட் பிரபு இணையும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பெயர் `மாநாடு'

எப்போதும் இல்லாத வகையில் படங்களில் நடிப்பதில் வேகம் காட்டி வருகிறார் சிம்பு. அந்தவகையில் மணிரத்னத்தின் `செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சிம்பு தொடர்ந்து புதிய படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். அதன்படி, அவருடைய சொந்த இயக்கத்தில் ஒருபடம், விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஒரு படம், கலைப்புலி எஸ். தாணுவின் தயாரிப்பில் படம், `விண்ணைத்தாண்டி வருவாயா'  படத்தின் அடுத்த பாகம், ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் ஆகியவற்றுடன் புதிதாக வெங்கட் பிரபுவுடன் இணைத்து ஒரு படத்தில் நடிக்கிறார். இதோடு நடிகை ஜோதிகா நடித்து வரும்  'காற்றின் மொழி' படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு நடித்துள்ளார். சிம்புவின் திடீர் வேகம் அவரின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், அவர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக சிம்பு - வெங்கட் பிரபு இணையும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இவர்கள் இணையும் படத்துக்கு `மாநாடு' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எப்போதும் காமெடியை மையமாக வைத்து படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு இப்படத்தின் காமெடியுடன் அரசியலையும் மையமாக வைத்து கதை ரெடி பண்ணியுள்ளார். இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி இப்படத்தை  தயாரிக்கவுள்ளார். எனினும் மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தமிழகத்தின் முக்கிய பிரச்னையாக காவிரி விவகாரம், ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு குறித்து சமீபத்தில் அதிரடி கருத்துகளை நடிகர் சிம்பு தெரிவித்திருந்த நிலையில் அவரது நடிப்பில் தற்போது அரசியல் படம் ஒன்று உருவாகவுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க