வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (10/07/2018)

கடைசி தொடர்பு:09:09 (11/07/2018)

குட் ஆர் ஈவில்...? '2.0' ரிலீஸ் தேதி அறிவிப்பு !

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் '2.0' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகம்தான் '2.0' என்ற செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, அந்தப் படத்துக்கும் இந்தக் கதைக்கும் தொடர்பு இல்லை என படக்குழு அறிவித்தது. 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வந்த இந்தப் படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

2. 0

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து முடிப்பதற்குள், ரஜினிகாந்த் நடிப்பில் 'கபாலி', 'காலா' ஆகிய இரு படங்கள் வெளியாகி அடுத்தப் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் சென்ற வருடம் அக்டோபர் 27-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து படம் ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் படத்துக்கான கிராஃபிக்ஸ் மற்றும் வி.எஃப்.எக்ஸ் பணிகள் நிறைவடைய சில கால அவகாசம் தேவைப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். பின், படத்தைப் பற்றிய எந்த அப்டேட்டும் வராமல் இருந்த நிலையில், படத்தை நவம்பர் 29-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்த அறிவிப்பை லைகா நிறுவனமும் இயக்குநர் ஷங்கரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க