கன்னடத்தில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி ! | vijay sethupathi debut in kannada film

வெளியிடப்பட்ட நேரம்: 07:46 (11/07/2018)

கடைசி தொடர்பு:10:44 (11/07/2018)

கன்னடத்தில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி !

ஆரம்பத்தில் சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கி, 'தென் மேற்குப் பருவக்காற்று' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தன்னை ஒரு ஹீரோவாகவோ, வில்லனாகவோ நினைக்காமல் எந்த கேரக்டராக இருந்தாலும் அதை அனுபவித்து அந்த கேரக்டராகவே மாறி தன் நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞனாக மக்கள் மனதில் நிற்கிறார்.

விஜய் சேதுபதி

சமீபத்தில் 'விக்ரம் வேதா' படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியவர், இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து,  'ஜுங்கா', '96', 'சூப்பர் டீலக்ஸ்', 'செக்கச் சிவந்த வானம்' 'சீதக்காதி' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும், தெலுங்கில் அதிகப்படியான பொருள்செலவில் உருவாகி வரும் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், சிவ கணேஷ் இயக்கும் 'அக்கடா' என்னும் கன்னடப் படத்தில் வசந்த் விஷ்ணு என்பவருக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க