வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (11/07/2018)

கடைசி தொடர்பு:13:30 (12/07/2018)

ரஜினிபட தாராவி செட்டில் விஜய், சூர்யா நடிக்கிறார்கள்!

ரஜினி

'காலா' படத்துக்காக மும்பை தாராவியை ஜெராக்ஸ் செய்ததுபோன்ற பிரமாண்டமான செட்டை, சென்னை ஈவிபி ஸ்டூடியோவில்  25 கோடி செலவில் அமைத்திருந்தார், ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம். மும்பை தாராவியில் சில காட்சிகளை மட்டுமே படமாக்கினார் பா.இரஞ்சித். மற்றபடி ரஜினியின் வீடு, செங்கல் சூளை சண்டைக்காட்சி என்று  பெரும்பாலான காட்சிகளை சென்னையில் உள்ள தாராவி செட்டிலேயே படம்பிடித்தனர். 'காலா' படப்பிடிப்பு முடிந்தபிறகு, அதே தாராவி செட்டில் தனுஷ் நடிக்கும் 'வடசென்னை' படத்தின் சில காட்சிகளைப் படம்பிடித்தார், இயக்குநர் வெற்றிமாறன்.

தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  விஜய் நடித்துவரும் 'சர்கார்' படப்பிடிப்புக்காக, ரஜினிபட தாராவி செட்டில் ஒருசில மாற்றங்களைச் செய்து ஷூட்டிங் நடத்திவருகிறார்கள்.  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் ஒரு ஷெட்யூல் காரைக்குடியில் நடந்தது. இப்போது,  சூர்யா நடிக்கும் முக்கியமான காட்சிகளைத் தம்பி தனுஷ் தயாரிப்பாளராக இருந்த 'காலா'வின் தாராவி செட்டில், மகிழ்ச்சியோடு படமாக்கிவருகிறார் செல்வராகவன்.     

நீங்க எப்படி பீல் பண்றீங்க