நரேன் கார்த்திகேயன் பயோபிக் உருவாகிறதா ?

இப்போது சினிமாவில் பயோபிக் எடுப்பதுதான் ட்ரெண்ட். அந்த வகையில், 'ஃபார்முலா ஒன்' கார் பந்தயத்தில் கலந்துகொண்ட முதல் இந்தியர் எனப் பெருமைகொண்டவரும்  இந்தியாவின் மைக்கேல் ஷூமேக்கர் என அழைக்கப்படுபவருமான நரேன் கார்த்திகேயன் வாழ்க்கை வரலாற்றையும் படமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

நரேன்-  உபன் படேல்

பல நாடுகளில் நடக்கும் சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் கலந்துகொண்டு சிறப்பித்தவர் இப்போது, சென்னை, கோயம்புத்தூரில் இருக்கும் ரேஸ் டிராக்குகளுக்குச் சென்று கார் ரேஸில் ஆர்வமுடைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனம் நரேன் கார்த்திகேயனின் பயோபிக்கைத் தயாரிக்க முன் வந்துள்ளது. மேலும், ஷங்கரின் 'ஐ' படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் உபன் படேலை நரேன் கார்த்திகேயன் வேடத்தில் நடிக்க வைக்க அணுகிவுள்ளனர். அவரும் இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, தமிழ், இந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை இயக்கும் இயக்குநர் யார் என்பதும் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!