விக்ரம், அக்‌ஷராவுடன் இணையும் நாசர் மகன் !

'தூங்காவனம்' படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் - அக்‌ஷரா ஹாசன் சேர்ந்து நடிக்கும் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நாசரின் மூன்றாவது மகன் அபி மெஹ்தி முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விக்ரம் - அக்‌ஷராஹாசன்

நாசரின் இரண்டாவது மகன் லுத்ஃபுதின், 'சைவம்', 'இது என்ன மாயம்', 'பறந்து செல்ல வா' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து, இவரின் தம்பியும் இந்தப் படத்தின் மூலமாக சினிமாத்துறையில் அடியெடுத்து வைக்கிறார். இந்தக் கேரக்டரில் நடிக்க தெலுங்கு நடிகர் நிதினை அணுகிய படக்குழு, பின் இவரை ஒப்பந்தம் செய்துள்ளது. ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து துவங்க இருக்கிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!