வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (12/07/2018)

கடைசி தொடர்பு:12:45 (12/07/2018)

`டன் தலைவா...' - சூர்யாவுக்கு விஜய் தேவரகொண்டாவின் ட்வீட்!

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் மூன்று நிமிட முன்னோட்ட காட்சி வெளியிடப்பட்டது. இந்தப் படம் தெலுங்கில் 'சின்ன பாபு' என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் தெலுங்கு ஸ்னீக் பீக் காட்சியை 'அர்ஜுன் ரெட்டி' புகழ் விஜய் தேவரகொண்டா தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

விஜய் தேவரகொண்டா

அதில், 'எனக்குப் பிடித்த நடிகர்கள் தயாரித்து நடித்த இந்தப் படத்தின் காட்சியை வெளியிடுவது மகிழ்ச்சி' எனவும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு நன்றி தெரிவித்த சூர்யா,  'நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதைகளையும் அதற்காக நீங்கள் கொடுக்கும் உழைப்பையும் நான் மதிக்கிறேன். விரைவில் சந்திப்போம்' என்று ட்வீட் செய்திருந்தார். 'டன் தலைவா... உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது' என கூறியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க