'கோலமாவு கோகிலா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

'அறம்' படத்துக்குப் பிறகு ஹீரோயினை மையப்படுத்திய 'கோலமாவு கோகிலா' என்னும் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமான நாளிலிருந்து படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. டார்க் ஹியூமர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசைமைத்து நெல்சன் இயக்கி உள்ளார்.

கோலமாவு கோகிலா

மேலும், இந்தப் படத்தில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜாக்குலின் நயன்தாராவுக்குத் தங்கையாக நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, 'விஜய் டிவி' புகழ் நிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லரும் சிவகார்த்திகேயன் எழுதிய 'கல்யாண வயசு' பாடலும் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, இந்தப் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது என்ற அறிவிப்பை லைகா நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. தவிர, அதர்வா, நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!