ஒரே நாளில் வெளியாகும் சாயீஷாவின் இரண்டு படங்கள் ! | two films acted by sayesha released in same day

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/07/2018)

கடைசி தொடர்பு:08:19 (13/07/2018)

ஒரே நாளில் வெளியாகும் சாயீஷாவின் இரண்டு படங்கள் !

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெளியாகவிருக்கும் படம் 'ஜுங்கா'. 'இதற்குத்தானே ஆசைப்படாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயீஷா, மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி - சாயீஷா

இவர்களைத் தொடர்ந்து, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லருக்கும் பாடல்களுக்கும் இணையத்தில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. குறிப்பாக, மக்கள் செல்வன் பாடல் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கொடுத்தது.  விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் இந்தப் படத்தை ஜூலை 27-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். சாயீஷா ஆர்யாவுடன் நடித்த 'கஜினிகாந்த்' படமும் இதே நாளில்தான் ரிலீஸாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க