ஒரே மேடையில் கமல்ஹாசன் - சல்மான் கான்! | kamal haasan and salman khan in same stage

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (14/07/2018)

கடைசி தொடர்பு:11:15 (14/07/2018)

ஒரே மேடையில் கமல்ஹாசன் - சல்மான் கான்!

கமல்ஹாசன் இயக்கி, நடித்த `விஸ்வரூபம்' திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதனால் 'விஸ்வரூபம் 2' படம் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் படத்துக்கான வேலைகள் பாதியில் நின்றன. பின், படத்தின் மீதி படப்பிடிப்பை நிறைவு செய்து படத்தை வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கின்றனர்.

கமல்ஹாசன் - சல்மான்

இந்தப் படத்தின் டிரெய்லரும் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் இந்தியில் 'விஸ்வரூப் 2' என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இதற்கான புரொமோஷன் பணிகளை ஆரம்பித்துவிட்டார் கமல்ஹாசன். சல்மான்கான் தொகுத்து வழங்கும் `தஸ் கா தம்' என்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொள்ள இருக்கிறார். திரையில் இருவரும் இணைந்து தோன்ற இருப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் இந்தி வெர்ஷனை இயக்குநர் ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து வெளியிடுகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க