வெளியிடப்பட்ட நேரம்: 06:40 (15/07/2018)

கடைசி தொடர்பு:06:40 (15/07/2018)

நீர் சாகசத்தில் அசத்தும் வேதாந்த் ; மாதவன் பெருமிதம் !

ஷாரூக் கான், அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து 'ஜீரோ' என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார், நடிகர் மாதவன். அந்தப் படத்தை, 'தனு வெட்ஸ் மனு', தனுஷின் 'ராஞ்சனா' ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய்  இயக்கி வருகிறார். மேலும், தமிழில் 'மாறா' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மாதவன்

இவருடைய மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் அதிக ஆர்வம் கொண்டவர்.  சில மாதங்களுக்கு முன்பு, தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு, இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் பெற்று தந்தார். இதனைத் தொடர்ந்து, தன் மகன் கடலில் நடக்கும் சாகச விளையாட்டில் கலந்துகொண்ட வீடியோவை "இது எனக்கு பெருமையான தருணம். கூடவே பயமாகவும் இருக்கிறது" என்ற கேப்ஷனோடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

                                             

நீங்க எப்படி பீல் பண்றீங்க