பிரபல கால்பந்து வீரரின் பயோபிக்கில் அஜய் தேவ்கன் !

பிரபல கால்பந்து வீரரும் இந்தியாவின் முன்னாள் கால்பந்து பயிற்சியாளருமான சையது அப்துல் ரஹிமின் வாழ்க்கை வரலாறு படமாக வெளிவர இருக்கிறது. அதில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்திய கால்பந்து அணிக்கு அஸ்திவாரம் அமைத்த சையது அப்துல் ரஹிம், 1950 முதல் 1963 ம் ஆண்டில் தன் இறக்கும் வரை இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் செயல்பட்டிருக்கிறார்.

அஜய் தேவ்கன்

இவர் இருந்த சமயத்தை இந்திய கால்பந்து அணியின் பொற்காலம் என்றே கூறலாம். 1956 -ம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் இந்திய அணியை அரை இறுதிக்கு அழைத்துச்சென்ற பெருமையும் சையது அப்துல் ரஹிமையே சாரும். அந்தச் சாதனை இந்திய கால்பந்து வரலாற்றில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர் ஆகியோர் தயாரிக்க அமித் ஷர்மா இயக்கவிருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!