யாஷிகாவா.. ? நித்யாவா..? பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேற போவது யார்? #vikatanpolls

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது நடைபெற்று நடைபெற்று வருகிறது. சனி மற்றும் ஞாயிறுகளில் இந்த வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகள் குறித்து கமல் போட்டியாளர்களிடம் உரையாடுவார். அதோடு ஞாயிறு பிக் பாஸ் வீட்டில் நாமினேஷன் பட்டியலில் இருப்பவர்களில் இருந்து ஒருவர் வெளியேற வேண்டும். இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் 4 போட்டியாளர்கள் இருந்தனர். யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், பாலாஜி, நித்யா ஆகிய நான்கு பேர் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் கமல்

இது தொடர்பாக விகடன் இணையதளத்தில் நடத்தப்பட்ட சர்வே முடிவுகள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். 

 

சர்வே முடிவு

விகடன் வாசகர்கள், தாடி பாலாஜி, மற்றும் நித்யா பிக் பாஸ் வீட்டில் தொடர வேண்டும் என விரும்புகின்றனர். அவர்கள் இருவருக்கும் தலா 9 சதவீத வாக்குகள்(என்ன ஒரு பொருத்தம்..?) கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் பொன்னம்பலம். இவர் நேற்று மக்களால் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்து விட்டார். இதனால் அடுத்த வாரம் பொன்னம்பலம் தொடர்வதில் சிக்கல் இல்லை. 25 சதவீத மக்கள் பொன்னம்பலம் வெளியேற வேண்டும் என வாக்களித்துள்ளனர்.  ஆனால், யாஷிகா ஆனந்த் தான் வெளியேற வேண்டும் என 57 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

விஜய் டி வி சர்வே

இது போன்று விஜய் டிவியும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “இந்தவாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்ற  ஒரு சர்வே நடத்தியது. இதிலும் பாலாஜி(7%) மற்றும் நித்யா(10%) சேஃப் தான்.  61 சதவீத வாக்குகள் பெற்று இந்த வாரம் வெளியேறப் போவது யாஷிகா தான் என அதிலும் பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இது எதுவும் யாஷிகாவை வெளியேற்ற போவதில்லை. பிக்பாஸ் வாக்கெடுப்பு  தனியாக நடைபெற்றிருக்கும். அதில் வரும் முடிவைத் தான் கமல் அறிவிப்பார். இங்குக் கிடைத்த முடிவுகள் அங்குப் பிரதிபலிக்குமா என்பதை இன்று இரவு வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் சமூகவலைதளங்களில் நித்யா வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் பரவி வருகிறது.  

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!