வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (15/07/2018)

கடைசி தொடர்பு:11:55 (16/07/2018)

ரோலர் கோஸ்டரில் ஐஸ்வர்யா ராய் பச்சன்! -வைரல் புகைப்படங்கள்

பாரிஸ் நகரில், தன் குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் பச்சன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். குழந்தையுடன் குழந்தையாக அவர் விளையாடும் மகிழ்ச்சி தருணங்கள் அடங்கிய புகைப்படங்கள் ஐஸ்வர்யா ராய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.  

ஐஸ்வர்யா ராய்

Photo Credit -insta\aishwaryaraibachchan_arb

ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 8-ல் வெளிவரவிருக்கும் படம் ஃபன்னி கான் (Fanney Khan). இப்படத்தின் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு தன் மகள் ஆரத்யா பச்சனுடன்  பாரிஸ் நகரில் ஹாலிடே டூரில் உள்ளார். இந்த பயணத்தில் ஈஃபில் டவர், டிஸ்னிலேண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு தன் மகளுடன் சென்றுள்ளார். அப்போது, அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். டிஸ்னிலேண்ட்டில் உள்ள ரோலர் கோஸ்டரில் ஆரத்யாவுடன் ஐஸ்வர்யாவும் அமர்ந்து உற்சாகமாகச் செல்லும் காட்சி காண்போர், புருவங்களை உயர்த்தச் செய்கிறது. `பட வேலைகள் இடையிலும் ஆரத்யாவுடன் நேரம் செலவிடுவதை தவிர்க்கவில்லை, ஐஸ்வர்யா ஒரு சூப்பர் மாம், பாலிவுட் குயின்' போன்ற கமெண்டுகளை ரசிகர்கள் தட்டி வருகின்றனர்.