இயக்குநர் ராமின் `பேரன்பு' டீசர் ரிலீஸ்! | peranbu Official First Teaser is released

வெளியிடப்பட்ட நேரம்: 19:22 (15/07/2018)

கடைசி தொடர்பு:19:22 (15/07/2018)

இயக்குநர் ராமின் `பேரன்பு' டீசர் ரிலீஸ்!

இயக்குநர் ராமின் 4வது படமாக உருவாகியுள்ள பேரன்பு படத்தின் முதல்  டீசர் ரிலீஸாகியுள்ளது.

பேரன்பு

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என தமிழ் சினிமாவிற்கு சிறந்த படைப்புக்களை கொடுத்தவர் இயக்குநர் ராம். 'தரமணி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'பேரன்பு'. இதில் மம்மூட்டி, அஞ்சலி, 'தங்கமீன்கள்' சாதனா ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவுபெற்று நெதர்லாந்து, பெர்லின், வெனீஸ் உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்குள்ள அனைவர் மனதையும் கவர்ந்ததுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. இந்நிலையில் படத்தின் முதல்  டீசர் தற்போது ரிலீஸாகியுள்ளது. இதேபோல் படத்தின் ஆல்பமும் இன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க