வெளியிடப்பட்ட நேரம்: 17:01 (16/07/2018)

கடைசி தொடர்பு:17:01 (16/07/2018)

`தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி!

'தொட்டாசிணுங்கி', 'சொர்ணமுகி' படத்தை இயக்கிய கே.எஸ்.அதியமான் சில வருடங்கள் தமிழ் சினிமாவுக்கு இடைவெளி விட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது அடுத்தப் படத்துக்கான பூஜையை நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து தொடங்கியிருக்கிறார். 

 உதயநிதி ஸ்டாலின்

சீனுராமசாமி இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் உதயநிதி. இவருக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிகை தமன்னா நடித்திருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் படத்தை உதயநிதியே தயாரித்தும் இருக்கிறார். கிராமத்துச் சாயலில் படத்தில் நடித்திருக்கும் உதயநிதி, இந்தப் படம் தனக்கான பெயரை வாங்கிக் கொடுக்கும் என்று நம்புகிறார்.

சினிமாவில் பரபரப்பாக நடித்து வரும் இவர் அவ்வப்போது அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இதற்கிடையில், இவரது புதியப் படத்துக்கான பூஜையை சத்தமின்றி முடித்திருக்கிறார். கே.எஸ்.அதியமான் இயக்கயிருக்கும் இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் கயல் ஆனந்தி. மற்றொருவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க