`கடைக்குட்டி சிங்கம்' படத்தைப் பாராட்டிய துணை ஜனாதிபதி! - நன்றி தெரிவித்த சூர்யா

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் `கடைக்குட்டி சிங்கம்'. இதில் கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா பினு ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர சத்யராஜ், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் தெலுங்கில் `சின்ன பாபு' என்ற பெயரில் வெளியானது.

வெங்கையா நாயுடு ட்வீட்

இப்படத்தை பார்த்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ``சமீபத்தில் வெளியான 'சின்னபாபு' படத்தை பார்த்தேன். கிராமத்துப் பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரஸ்யமான நல்ல படம்" என்று ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, ``நாட்டு மக்களின் பெருமதிப்பிற்குரிய தாங்கள், எங்களின் படைப்பான `கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்தைப் பார்த்து மனம்திறந்து பாராட்டியது எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் தங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள்" என நன்றி தெரிவித்துள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!