வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (17/07/2018)

கடைசி தொடர்பு:15:40 (17/07/2018)

சல்மான் கானுடன் விளையாடிய கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடித்து, தயாரித்து இயக்கிய 'விஸ்வரூபம் 2' படம், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. அதன் வெளியீட்டுக்கான பப்ளிசிட்டி செய்யும் சல்மான் கான், இந்தியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

கமல்ஹாசன்


இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகியுள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, அதை விளம்பரப் படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ள கமல், முதற்கட்டமாகத் தமிழ் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் படத்தின் பாடல்களை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, தற்போது இந்தி  சோனி தொலைக்காட்சியில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் விளையாட்டு நிகழ்ச்சியில், கமல் படத்தின் கதாநாயகி பூஜா குமாருடன் இணைந்து பங்கேற்றுள்ளார். பொழுதுபோக்கு வினாவிடை  விளையாட்டு  நிகழ்ச்சியான இதில், கமல் முதன்முறையாகப் பங்குகொள்வது குறிப்பிடத்தக்கது. மும்பையில் நடந்த இந்த படப்பதிவின்போது எடுக்கப்பட்ட புகைப்படம், படு வைரலாக ஷேர் செய்யப்பட்டுவருகிறது.