வெளியிடப்பட்ட நேரம்: 18:23 (17/07/2018)

கடைசி தொடர்பு:18:23 (17/07/2018)

மூன்று இயக்குநர்கள்... ஒரு படம்... சந்தோஷத்தில் கெளதம் மேனன்!

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், தனுஷின் அண்ணனாக சசிகுமார் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியானது. இப்போது எடுத்து வரும் காட்சிகளில் அவருக்கான போர்ஷன்களும் அடங்கும்.

கெளதம் மேனன்

எனவே, இந்தப் படப்படிப்பில் கெளதம் மேனன், தனுஷ், சசிகுமார் ஆகிய மூன்று இயக்குநரும் உள்ளனர். இறுதிக்கட்ட படப்பிடிப்பின் பத்து நாள்களில் ஐந்து நாள்கள் சென்னையிலும் ஐந்து நாள்கள் மும்பையிலும் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள். இப்படத்தின் 'மறுவார்த்தை', 'விசிறி' ஆகிய பாடல்களுக்கு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் பெயரை புது டைட்டில் ஃபான்டுடன் வரும் 20-ம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க