ஸ்ட்ரிக்ட் ஹாஸ்டல் வார்டன்.. ஹேண்ட்சம் மகன்கள்! - ரஜினியின் அடுத்த அவதாரம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் படத்தில் பாபி சிம்ஹா மற்றும் சனந்த் ரெட்டி இருவரும் ரஜினியின் மகன்களாக நடிக்கின்றனர்.

ரஜினிகாந்த்
 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இத்திரைப்படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக ரஜினிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருப்பதாகத் தகவல் பரவியது. ஆனால் தற்போது ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் டார்ஜ்லிங்கில் தொடங்கிவிட்டதாம். இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கும் செய்தியை முன்பே கூறிவிட்டார் கார்த்திக் சுப்புராஜ். 

`காலா’ படத்தில் ரஜினியின் குடும்பத்தினராக நடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் படத்துக்கு பலமாக அமைந்தது. அதே பாணியில் கார்த்திக் சுப்புராஜும் ரஜினியின் மகன்களாக இருவரைத் தேர்வு செய்துள்ளார். பாபி சிம்ஹா மற்றும் சனந்த் ரெட்டி ஆகிய இருவரும் ரஜினியின் மகன்களாக நடிக்கின்றனர். எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த `மேகா ஆகாஷ்’ இத்திரைப்படத்தில் சனந்த் ரெட்டிக்கு ஜோடியாக  நடிக்கிறார்.

படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் டேராடூனில் தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினி ஹாஸ்டல் வார்டனாக மிரட்ட உள்ளாராம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!