மூன்றாம் முறையாக இணையும் விஜய் - அட்லி கூட்டணி!

விஜய் - அட்லி கூட்டணியில் சென்ற ஆண்டு தீபாவளிக்கு வெளியான 'மெர்சல்' மாபெரும் வெற்றியைப் பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் 'சர்கார்' படத்தில் நடித்து வருகிறார்.

அட்லி

விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடிவடையவுள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்து விஜய் எந்த இயக்குநருடன் இணைவார் என்ற எதிர்பாப்பு இருந்துவருகிறது.  விஜய்-மோகன் ராஜா, விஜய்- வினோத் எனப் பல யூகங்கள் இருந்து வந்தன. மெர்சல் மூலம் விஜய்க்கு பெரிய ஹிட் கொடுத்த அட்லி, விஜய்யுடன் மூன்றாம் முறையாக இணையவுள்ளார் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் அதிக பட்ஜெட் செலவில் மிகப் பிரமாண்டமாக இப்படம் தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!