வெளியிடப்பட்ட நேரம்: 18:52 (18/07/2018)

கடைசி தொடர்பு:18:52 (18/07/2018)

உலகில் அதிக வருமானம் ஈட்டிய முதல் 100 பிரபலங்கள்! - போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியல்

உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் முன்னணி நடிகர்கள் இடம் பிடித்துள்ளனர்.

சல்மான், ஷாரூக்

உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் 100 பேர் கொண்ட பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் சல்மான் கான், ஷாரூக் கான், அக்‌ஷய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் அமிதாப் பச்சன் பெயர்  இடம் பெறவில்லை. கடந்த 2017 ஜூன் 1 முதல் 2018 ஜூன் 1-ம் தேதி வரையிலான ஓராண்டு வருமானத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஷாரூக் கான் 65-வது  இடத்தையும், சல்மான் கான் 82-வது இடத்தையும், அக்ஷய் குமார் 76-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் ஷாரூக் கானின் வருமானம் 38 மில்லியன் என குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில் ராயஸ் (raaes) திரைப்படத்தில் நடிகர் ஷாரூக்கான் நடித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் ரூ.308 கோடி வருமானம் ஈட்டியதாகக் கூறப்படுகிறது. அடுத்தபடியாக சல்மான் கானின் வருமானம் ரூ.37 மில்லியன் என அதில் குறிப்பிட்டுள்ளது. கடந்த  ஆண்டில் சல்மான் கான் 4 படங்களில் நடித்திருந்தார். இதில் `ட்யூப் லைட்' படம் ரூ.200 கோடி வருமானம் ஈட்டியது. அடுத்தபடியாக இந்தப் பட்டியலில் அக்‌ஷய் குமார் வருமானம் ரூ.35 மில்லியனுக்கும் மேல் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டில் அவர் நடிப்பில் வெளியான `பேட் மேன்' படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் ரூ.120 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ள பாடகர் டிடி என்றழைக்கப்படும் சீன்கோம்ஸ் 105 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளார். இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் பாப் இசை நட்சத்திரமான பியான்ஸும், மூன்றாவது இடத்தில் ஹாரிபாட்டார் சீரிஸ் நாவல்களை எழுதிய ஜே.கே.ரௌலிங்கும் இருக்கின்றனர். மேலும், கால்பந்து வீரர்களான ரொனால்டோ 5வது இடத்திலும், மெஸ்ஸி 13வது இடத்திலும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.