வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (19/07/2018)

கடைசி தொடர்பு:15:40 (19/07/2018)

`ஷூட்டிங் இடையில பார்க்க வர்றேன்'னு சொல்லியிருக்கார்!’ - `தெய்வம் தந்த வீடு' மேக்னா ரிட்டர்ன்

'தெய்வம் தந்த வீடு' மேக்னா மறுபடியும் தமிழ் சீரியல் பக்கம் வருகிறார்.

`ஆளே மாறிட்ட ரோகிணி' என்ற ஒரே டயலாக்கில் இவ்வளவு நாள் ரோகிணியாக நடித்து வந்த ஆயிஷாவை அனுப்பிவிட்டு, அந்த இடத்துக்கு மேக்னாவை கூட்டி வந்திருக்கிறார்கள். 'பொன்மகள் வந்தாள்' தொடரில்தான் இந்த ஆள் மாற்றம். இன்று முதல் ஆயிஷாவுக்குப் பதில் ஹீரோயினாக வருகிறார் மேக்னா. 'தெய்வம் தந்த வீடு' தொடரில் அப்பாவி மருமகளாக வந்து கவனம் ஈர்த்தாரே அவரேதான்.

கடந்த வருடம் நகைக்கடை அதிபரைக் கல்யாணம் செய்துகொண்டு, சீரியலுக்கு பிரேக் எடுத்தவர், மறுபடியும் ஃபீல்டுக்குத் திரும்பியிருக்கிறார்.

மேக்னா

அவரிடம் பேசியபோது, ''கல்யாணத்துக்குப் பிறகு தொடர்ச்சியா சில நாள்கள் கணவரோடு நிறைய இடங்களுக்கு ட்ராவல் பண்ணினேன். அதுக்குப் பிறகு வழக்கம்போல் அவர் தன்னோட பிசினஸ்ல பிசியாகிட்டார். அப்பதான் எனக்கு லேசா போர் அடிக்கிற மாதிரி தெரிஞ்சது. 'தொடர்ந்து நடிக்கணுமாங்கிறதுல உன் இஷ்டப்பட முடிவெடுத்துக்கோ'ன்னு ஏற்கெனவே சொல்லிட்டார். அதனால மலையாளத்துல சில ஷோக்கள்ல தலைகாட்டத் தொடங்கினேன். தமிழ்லயும் டான்ஸ் ஷோ ஒண்ணுல வந்தேன். தமிழ் சீரியல்னா மாசத்துல 15 நாள் கணவரைப் பிரிஞ்சு சென்னையில இருக்க வேண்டியிருக்குமேன்னு கமிட் ஆகாம இருந்தேன். ஏற்கெனவே ஒர்க் பண்ணிட்டிருந்த சேனல்லயிருந்தே இப்ப கூப்பிட்டதால கமிட் ஆகிட்டேன். '15 நாள் ஷூட்' பத்தி மட்டும் அவர்ட்ட பேசினபோது, 'பரவால்ல, அர்ஜென்ட்டா பார்க்கணும்னு ஆசைப்பட்டா, ஒரேயொரு ஃபோன் பண்ணினா ஃபிளைட்டை பிடிச்சு நான் வந்துட்டுப் போறேன்'னு சொல்லிட்டார். பிறகென்ன, கிளம்பி வந்துட்டேன்' எனச் சிரிக்கிறார்.