வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (19/07/2018)

கடைசி தொடர்பு:18:20 (19/07/2018)

யு/ஏ பெற்றது 'நரகாசூரன்'... விரைவில் கார்த்திக் நரேன் - சிம்பு கூட்டணி!

`துருவங்கள் பதினாறு' படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் படம் 'நரகாசூரன்'. இதில் அரவிந்த் சுவாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

நரகாசூரன்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் நிலையில், படத்தைப் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. கெளதம் மேனன் - கார்த்திக் நரேன் இடையேயான சில மனஸ்தாபத்துக்குப் பிறகு, படத்தை சென்சார் போர்டுக்கு அனுப்பியுள்ளது படக்குழு.  யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ரிலீஸுக்குப் பிறகு 'நாடக மேடை' படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளைத் தொடங்கவிருக்கிறார்கள். வெங்கட் பிரபு - சிம்புவின் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைதற்குள் 'நாடக மேடை' படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சிம்புவை இயக்க இருக்கிறார் கார்த்திக் நரேன். 
வாழ்த்துகள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க